உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம்: ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் அபிேஷக, பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.நேற்று கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. வழிவிடுமுருகன்கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் பூஜைகள் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.-------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை