உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை குறு வட்டார விளையாட்டு போட்டி

கீழக்கரை குறு வட்டார விளையாட்டு போட்டி

திருப்புல்லாணி: கீழக்கரை குறு வட்டார அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம்., அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோகோ மற்றும் எறிபந்து போட்டிகள் நடந்தன. இப்போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தலைமை வைத்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ராஜகுரு, முகைந்திரன், ஜீவா, ஜெயக்குமார் மற்றும் பள்ளி களின் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை தாலுகா அளவிலான 30 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். 13 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடக்க உள்ளது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள் ஆக.,19ல் ஆண்கள் பிரிவிற்கும், ஆக., 20ல் பெண்கள் பிரிவிற்கும் நடக்கிறது. விளையாட்டு போட்டிகளுக்கான ஏற் பாடுகளை பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் ஜாகிர் உசேன் செய்திருந்தார். ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விளை யாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ