கீழக்கரை: போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது
கீழக்கரை: கீழக்கரையில் விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கீழக்கரை மன்னார் வளைகுடா அருகே பெரிய காடு ஒத்தப்பனை கடற்கரை அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 72 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 12 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக கீழக்கரை என்.எம்.டி., தெரு ஆக்கில் அலி 27, முகமது நபில் 23, திருப்புல்லாணி அருகே ஈசுப்புளிவலசை ஜெயசூர்யா 22, ஆகிய மூவர் மீதும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிந்து கைது செய்தார்.