உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்ணெண்ணெய் வினியோகம் உளவு பிரிவு கண்காணிப்பு

மண்ணெண்ணெய் வினியோகம் உளவு பிரிவு கண்காணிப்பு

ராமநாதபுரம் : ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வினியோகத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து உளவு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். காஸ் விலை உயர்வை தொடர்ந்து நடுத்தர வர்க்கத்தினர் காஸ் சிலிண்டர் பயன்பாட்டை சிக்கனப்படுத்துகின்றனர். இதற்காக மண்ணெண்ணெய் பயன்பாட்டை மீண்டும் துவங்கி உள்ளநிலையில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய் வினியோகிக்கும் பங்குகள், கடைகளில் 'அடுத்தவாரம்தான் ஊற்றுவோம், என்றும் நேற்று ஏன் வரவில்லை, உங்கள் கார்டு பகுதிக்கு ஊற்றிவிட்டோம்' என, பலவாறு மக்களிடம் கூறி ஏமாற்றுகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தால், அடுத்த மாதம் மண்ணெண்ணெய் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் மக்கள் வெளியே சொல்வதில்லை. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி தற்போது உளவு பிரிவு போலீசார் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வினியோக முறையை கண்காணித்து அறிக்கை அனுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை