மழலையர் காய்கறி சந்தை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'காய்கறியும் கணிதமும்' நிகழ்வு நடந்தது. இதில் மழலையர் பள்ளி மாணவர்கள் தங்கள் மழலை கொஞ்சும் மொழியில் காய்கறிகளை கணக்கிட்டு விற்பனை செய்தனர். அவர்களிடம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காய்கறிகளை பேரம் பேசி வாங்கினர். இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதில் கணிதத்தை தனது வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி எளிதாக கற்றுக் கொள்வர் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.