மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
21-Oct-2024
ராமநாதபுரம்; பரமக்குடி அருகே குளத்துாரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.,1638 ம் ஆண்டு கல்வெட்டு ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பர்ஜித், ஆசிரியர்கள் கொடுத்த தகவலில் அப்பகுதியில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு செய்தார்.அது கி.பி.1638-ம் ஆண்டு இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் குளத்துார் கண்மாயில் குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு எனத் தெரிய வந்தது. இக்கல்வெட்டு பாதுகாப்பாக ராமநாதபுரம் தொல்லியல் துறையின் ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ்வைப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் அலுவலர் சுரேஷ், குளத்துார் வி.ஏ.ஓ., தமிழரசி, ஊராட்சித் தலைவி நாகலட்சுமி, தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, ஆசிரியர் பால்துரை பங்கேற்றனர்.
21-Oct-2024