உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் நவ.30ல் கும்பாபிஷேகம்: நாளை யாகசாலை பூஜையுடன் துவக்கம்

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் நவ.30ல் கும்பாபிஷேகம்: நாளை யாகசாலை பூஜையுடன் துவக்கம்

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தட்சன் ஊருணி அருகே உள்ள பூரண புஷ்கலா அம்பிகா சமேத செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் நவ.,30ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நாளை நவ.,28ல் விக்னேஸ்வர பூஜை யுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கு கிறது. மதியம் 3:00 மணிக்கு தொண்டாலை மேலக்கரை அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க நாட்டிய குதிரை முன்னே செல்ல 108 தீர்த்த கலசங்களை சுமந்து பக்தர்கள் ஊர்வல மாக கொண்டு செல்ல உள்ளனர். நவ.,29ல் இரண்டாம் கால யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், விசேஷ தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்கிறது. நவ., 30 காலை நான்காம் கால யாக சாலை பூஜைக்கு பிறகு காலை 10:30 மணிக்கு மேல் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி, அன்னதானம், மாலையில் விளக்கு பூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை நட்டாத்தி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொதுமக்கள், குலதெய்வ வழிபாட்டு குழு வினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி