உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

கீழக்கரை : கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை, சுமங்கலி பூஜை, பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஹரிஹர சர்மா செய்திருந்தார். உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை