கடற்படை விமான தளம் விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணி முடக்கம்
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமானத்தளம் விரிவாக்கம் செய்வதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிமுடங்கியுள்ளது.உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தளம் 1984ல் துவக்கப்பட்டது. இங்கு ஒரு ஆளில்லா விமானம், இரண்டு சேட்டக் ஹெலிகாப்டர்கள், அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன. இவை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் கண்காணிப்பு, மீட்புபணிகளில் பயன்படுத்தப்ப டுகிறது. இயற்கை சீற்றங்களின் பொது மக்களுக்கு மருந்து பொருட்கள், உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துகின்றனர். ஐ.என்.எஸ்., பருந்து ஓடுதளப்பாதையை 3000 அடியில் இருந்து8000 அடியாக விரிவாக்கம் செய்து பெரிய கடற்படைவிமான தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிலம் கையகப்படுத்த மாவட்ட வருவாய்த்துறையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மூன்றாண்டுகளாகியும் இப்பணி முடங்கியுள்ளது. கடந்த 2023 ல் மத்திய அரசு உச்சிப்புளியில்பயணிகள் விமான நிலையம் அமைக்க உள்ளதாகவும்அறிவித்தது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், விரிவாக்கத்திற்காக 2021ல் அப்பகுதியில் சேர்வைகாரன் வலசையில் இடம் கையகப்படுத்த அளவிடப்பட்டது. ரயில்வே இடமும் தேவைப்படுகிறது. மின்சார ரயில்கள் இயக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அவர்களது நிலத்தைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு 3 ஆண்டுளாக அப்படியே உள்ளது. அரசு உத்தரவிட்டால் மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.