மேலும் செய்திகள்
நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் 9 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முனியசாமி, இணைச்செயலாளர் பூமிநாதன், பொருளாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.நிலஅளவை துறையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும்.சிறப்பு திட்ட மனுக்கள் மீது கால நிர்ணயம் செய்து ஊழியர்கள் மீது பணிச்சுமையை அதிகரிக்க கூடாது. நியாமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் விஜயகுமார், செயலாளர் நஜ்முதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Dec-2024