மேலும் செய்திகள்
மத்திய அரசு வழக்கறிஞர்கள் சந்திப்பு கூட்டம்
25-May-2025
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே பூசேரியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அலிஅக்பர் 30. முதுகுளத்துாரில் கடலாடி ரோடு நீதிமன்றம் அருகே வாடகை அறையில் அவ்வப்போது தங்கி வழக்கு சம்பந்தமான பணியை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வழக்கறிஞர் அலி அக்பர் எங்கு சென்றார் என தெரியவில்லை.நேற்று சக வழக்கறிஞர்கள் அவரது அறையில் பார்த்த போது மின்விசிறியில் அலிஅக்பர் துாக்கிட்டு இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
25-May-2025