மேலும் செய்திகள்
ஆடி பொங்கல் விழா கொடியேற்றம்
10-Aug-2025
கமுதி,:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழாவில் இலந்தை முள்வேலியில் படுத்து பூஜாரி சுந்தரராஜ் அருள்வாக்கு கூறினார். இக்கோயிலில் ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வினோதமான முறையில் பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடனும் செலுத்தினர். கரியமல்லம்மாளுக்கு பால், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் முடிந்து தீபாரதனையும் நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் (ஆக.17ல்) பக்தர் ஒருவர் உடல் முழுவதும் வைக்கோல் வைத்து சாக்குவேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி துாக்கி வந்து பெண்கள் தண்ணீரில் கரைத்தனர். அப்போது கோயில் பூஜாரி சுந்தரராஜ் இலந்தை முள்வேலியில் படுத்து அருள்வாக்கு கூறினார். இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.
10-Aug-2025