மேலும் செய்திகள்
ஜாமினில் வந்தவர் கொலையில் 5 பேர் கைது
11-Sep-2024
முதுகுளத்துார் : முதுகுளத்துார்- -பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே ரோட்டோரம் இருந்த பழமையான புளிய மரம் முறிந்து விழுந்தது.முதுகுளத்துாரில் இருந்து கீழத்துாவல், கீழக்கன்னிச்சேரி, வெண்ணீர்வாய்க்கால், உடைகுளம் வழியாக பரமக்குடி ரோட்டில் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான புளிய மரம் முறிந்து விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் சாய்ந்த மரக் கிளைகளை அகற்றினர். முதுகுளத்துார் -பரமக்குடி ரோட்டோரத்தில் பழமையான பட்டுப்போன மரங்களை நெடுஞ்சாலைதுறையினர் அகற்றம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
11-Sep-2024