உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயில் படித்துறை அருகே பூட்டியுள்ள கழிப்பறை; அசுத்தமாகுது வைகை ஆறு

பெருமாள் கோயில் படித்துறை அருகே பூட்டியுள்ள கழிப்பறை; அசுத்தமாகுது வைகை ஆறு

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆறு பெருமாள் கோயில் படித்துறை அருகில் கழிப்பறை பூட்டிக் கிடப்பதால் வைகை ஆறு அசுத்தமாகிறது.மத்திய அரசு துாய்மை இந்தியா திட்டத்தை பல வழிகளில் தயார் படுத்திக் கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன்படி அனைவருக்கும் கழிப்பறை வசதி, குப்பை இல்லாத நகரம் என சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்நிலையில் பரமக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சுகாதார வளாகங்கள், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தண்ணீர் வசதி செய்யப்படாமல் உள்ளதுடன் பல இடிந்து வருவதால் பூட்டியே வைத்துள்ளனர்.இதன்படி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படித்துறையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டது. இது அவ்வப்போது சேதமடைந்தாலும் சீரமைக்கப்பட்டு செயல்பட்டது.இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி வைத்துள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உட்பட அப்பகுதி மக்கள் வைகை ஆற்றை பயன்படுத்தும் நிலை உள்ளது.இதனால் திருவிழா காலங்களில் சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது. ஆகவே நகராட்சி சுகாதாரத்துறை கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை