உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டப்பட்ட கழிப்பறை திறப்பு

தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டப்பட்ட கழிப்பறை திறப்பு

தினமலர் செய்தி எதிரொலிதேவிபட்டினம்:தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பல நாட்களாக பூட்டிக் கிடந்த கழிப்பறை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டது.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பறை கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகள் உட்படபயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். பயணிகளின் சிரமங்கள் குறித்தும் பூட்டிகிடக்கும் கழிப்பறையை திறக்க வலியுறுத்தியும் தினமலர்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தினமலர்நாளிதழ் செய்தி எதிரொலியாக நேற்று பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை திறக்கப்பட்டது. இதனால்பஸ் ஸ்டாண்ட் வந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி