சூடை மீன் வரத்து குறைவு
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடல் பகுதியில் அதிகளவு சூடை மீன்கள் வரத்து இருக்கும். மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தற்போது அதிகளவு படகுகள் கடலுக்கு சென்று வரும் நிலையில் சூடை மீன் வரத்து குறைவாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.களிமண்குண்டு பகுதியில் பிடிபடக்கூடிய சூடை மீன்கள் அதிக சுவை கொண்டதாக உள்ளது. இதன் மகத்துவம் அறிந்து ஏராளமானோர் இப்பகுதியில் சூடைமீன்கள் வாங்குவதற்காக குவிக்கின்றனர். மீன் வியாபாரி கூறியதாவது:தற்போது சூடை மீன் வரத்து குறைவாகவே உள்ளது. ஒரு கிலோ சூடை மீன் முன்பு ரூ.100க்கு விற்றது. தற்போது ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில வாரங்களுக்கு பிறகு சூடைமீன் வரத்து அதிகளவில் இருக்கும் என நம்புகிறோம் என்றனர்.