இன்ஸ்பெக்டருக்கு ஜி-பேயில் லஞ்சம் கொடுத்தவர் கைது
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமிக்கு ஜி-பேயில் லஞ்சம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.திருவாடானை அருகே கருமொழி டாஸ்மாக் கடை பின்புறம் அனுமதியின்றி மது விற்ற சுப்பிரமணியன் 60, கைது செய்யப்பட்டார். மற்றொருவரான பிரபு 39, தன்னை கைது செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியை அலைபேசியில் பிரபு தொடர்பு கொண்டார். தன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ஜி-பேயில் பணம் அனுப்புவதாக கூறியவர் ரூ.100 அனுப்பியுள்ளார். தனக்கு லஞ்சமாக ரூ.100 அனுப்பியது குறித்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி திருவாடானை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்தார்.