உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கொன்றவர் கைது

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கொன்றவர் கைது

ராமநாதபுரம்:கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை வெட்டி கொலை செய்த கருப்பசாமியை 23, போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் திவ்யா 21. இவரது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். தனது இரு குழந்தைகளுடன் தாய் கருப்பாயி 45, வீட்டில் திவ்யா வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு திவ்யாவுக்கும் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கருப்பசாமிக்கும் 23, இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை கருப்பாயி கண்டித்துள்ளார். இதையடுத்து தனக்கும் திவ்யாவுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கருப்பசாமி கேட்டுள்ளார். கருப்பாயி மறுக்கவே செப்.4ல் அவரை திவ்யா கண் முன்பே கருப்பசாமி வெட்டி கொலை செய்து தப்பினார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கருப்பசாமி மீது ஏற்கனவே காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டல் வழக்கு நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி