மேலும் செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
24-Aug-2025
மூன்று விபத்துகளில் 5 பேர் பலி
29-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி.ஐ.ஜி., முகாம் அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத நபர் விழுந்துள்ளதாக கேணிக்கரை போலீசாருக்கு புகார் வந்தது. அங்கு சென்ற போலீசார் கழிவுநீர் கால்வாய் சகதியில் முகம் புதைந்த நிலையில் கிடந்தவரை மீட்டு வெளியே கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் குறித்து போலீசார் விசாரணையில் அவர் பட்டணம்காத்தான் ஆதம்நகர் ஜெகநாதன் 49, என தெரிய வந்தது. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Aug-2025
29-Aug-2025