உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடலாடி விவசாயி கொலையில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

 கடலாடி விவசாயி கொலையில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

பரமக்குடி: கடலாடி பகுதியில் விவசாயி கொலை செய்யப் பட்ட வழக்கில் ஒரு வருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலாடி தாலுகா கண்ணன் புதுவன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 45. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சத்திய மூர்த்தி 45. சுப்பிரமணி வளர்த்து வந்த ஆடு சத்திய மூர்த்தி வீட்டுக்கு சென்று உள்ளது. அப்போது சத்திய மூர்த்தி ஆட்டை கத்தியால் அறுத்துள்ளார். இதே போல் அடுத்த நாளும் வேறு ஆடு சென்றுள்ளது. இதனால் சுப்பிரமணி, மனைவி லட்சுமி ஆகியோருக்கும் சத்தியமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 மார்ச் 3ல் சத்தியமூர்த்தி சீமைக் கருவேல மரக்கட்டையால் சுப்பிரமணியனை அடித்துக் கொலை செய்தார். அவர் மனைவி லட்சுமி கடலாடி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு பரமக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி பாலமுருகன் நேற்று சத்தியமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற அரசு வக்கீல் ஜான் ராஜதுரை வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ