மேலும் செய்திகள்
வாலிபர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
08-Mar-2025
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ராட்டினம் உரிமையாளர் முத்துக்குமார் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கலைச்செல்வனை 21, போலீசார் கைது செய்தனர்.பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் 29, சரவணன் 29. திருவிழாக்களில் ராட்டினம் அமைக்கும் தொழில் செய்தனர். கடந்தாண்டு நவ.1 ல் தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் பட்டப்பகலில் கள்ளக்காதல் தகராறு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சுசீலாவையும் வெட்டினர். இவ்வழக்கில் போலீசார் ஏற்கனவே சரவணன் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை தேடிவந்தனர். சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
08-Mar-2025