உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மண்டல பூஜை விழா துவக்கம்

 மண்டல பூஜை விழா துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி பாரதி நகரில் அமைந்துள்ள தர்ம சாஸ்தா கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் 55 வது ஆண்டு மண்டல பூஜை விழா துவங்கியது. கோயிலில் நேற்று நெய், பால் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. டிச., 25ல் லட்சார்ச்சனை விழா நடக்கிறது. டிச., 26 மதியம் அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. தொடர்ந்து டிச.,27 காலை வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் எடுக்கப்பட்டு நகர் வலம் வந்தபின் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இரவு புஷ்ப அலங்காரத்துடன் ஐயன் வீதி உலா வர உள்ளார். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா கோயில் விழாக் குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை