உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி

கமுதி : -கமுதி அருகே பேரையூரில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.கமுதி அருகே பேரையூர் பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சமூக ஒற்றுமை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.,சதன் பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதுகுளத்துார் அருகே உள்ள எட்டுச்சேரி பஸ் ஸ்டாண்டில் துவங்கி பேரையூர் பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை 6.5 கி.மீ., வரை மாரத்தான் நடந்தது.இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முடிவில் ஆண்கள், பெண்கள் தனிதனியாக முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்கம், மாணவர் மன்றத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை