உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கிஷ் ப்ளோ என்ற நிறுவனத்துடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தி எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியலாம். நிறுவன உரிமையாளர் சுரேஷ் சம்பந்தம் ஒப்பந்தத்தை கணினித்துறை தலைவர் கார்த்திகேயனிடம் வழங்கினார். மேலாண்மை துறை தலைவர் ஜான் சாமுவேல், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !