உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம்

கமுதி; கமுதி அருகே ஆண்டநாயகபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் 5ம் ஆண்டு ஆவணி மாத பொங்கல் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !