உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் டிசம்பரில் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள்

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் டிசம்பரில் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள்

கீழக்கரை : ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை 18 கி.மீ.,ல் உள்ளது.துாத்துக்குடி முதல் கீழக்கரை வழியாக ராமநாதபுரம், தேவிபட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை 2010ல் அமைக்கப்பட்டது. தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை செல்லும் ரோட்டில் பல இடங்களில் குண்டும் குழியுமாகவும் சேதமடைந்துள்ளது.கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏராளமான சிறு பள்ளங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் மேலும் பல இடங்களில் ரோடு சேதமடைந்துள்ளது. ரோட்டின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளின் முகத்தில் அடிப்பதால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத நிலை தொடர்கிறது.கடந்த டிச., மாதத்தில் 20க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சேதமடைந்த சாலைகளும் பராமரிப்பு இல்லாத நிலையும் தான். இது குறித்து முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளேன்.இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் செல்வது சவாலான விஷயமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையோர சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் உரிய எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ