உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி

தொண்டியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. பொதுவாக ஆனி பிறந்தாலே சீதோஷ்ண நிலை மாறும். ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் மதிய நேரங்களில் கடும் வெப்பமாக உள்ளது. நெடுஞ்சாலையில் டூவீலர்களில் செல்பவர்கள் மீது அனல் காற்று வீசுவதால் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் கட்டட தொழிலாளர்கள், கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமம் அடைந்துள்ளனர். அதிக வெப்பத்தால் உடலில் கொப்புளங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. கால்நடைகள் கூட வெயில் தாங்க முடியாமல் ஆங்காங்கே மரங்களின் நிழலில் இளைப்பாறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ