உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சி பொருளாக மாறியது எம்.பி., நிதி சோலார் விளக்கு

காட்சி பொருளாக மாறியது எம்.பி., நிதி சோலார் விளக்கு

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி 5வது வார்டு முத்துசாமிபுரத்தில் எம்.பி., நிதியில் அமைக்கப்பட்ட சோலார் விளக்கு எரியாமல் காட்சி பொருளாக உள்ளது.எம்.பி., நிதியில் அடல் ஜோதி சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படாமல் உள்ளதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. முத்துசாமிபுரம் பா.ஜ., நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் கூறியதாவது:நவாஸ்கனி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் சோலார் விளக்குகள் கீழக்கரையில் பல இடங்களில் அமைக்கப்பட்டு எரியாமல் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே அவற்றை முறையாக பழுது நீக்கி வெளிச்சம் தர செய்ய வேண்டும்.கீழக்கரை முத்துசாமிபுரத்தில் 2023ல் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் காற்றோட்டம் இல்லாமல் உள்ளது. ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் திருமண மண்டபம் தேவை. ஆனால் கட்டிக் கொடுக்கப்பட்ட நிதியில் உள்ள சமுதாயக்கூடம் காற்றோட்ட வசதியின்றி கோடவுன் போல் உள்ளது.இதனால் சிரமத்தை சந்திக்கிறோம். சமுதாய கூடத்தை சுற்றிலும் குப்பை அதிகளவு தேங்கி உள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் எங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி