மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை: ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
06-Sep-2025
ரெகுநாதபுரம் : -ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி உற்ஸவம் விழா இன்று முதல் கொண்டாடப்படுகிறது. காலையில் கணபதி ஹோமமும், கோயில் வளாகத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற செப்., 26 வெள்ளிக்கிழமை மாலையில் சுமங்கலி பூஜை நடக்கிறது. அக்., 2 வியாழக் கிழமை மாலை உற்ஸவர் வல்லபை ஐயப்பன் தசரா விழாவை முன்னிட்டு வில் மூலம் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பத்து நாட்களுக்கு வல்லபை மஞ்ச மாதாவுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் மண்டகப்படி உபயதாரர்களின் சிறப்பு பூஜையும் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதமும், பள்ளி மாணவர்களின் அலங்கார நடனம், நாட்டியம், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன், வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளை செய்கின்றனர்.
06-Sep-2025