உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேப்பங்கொட்டைக்கு கிராக்கி கிலோ ரூ.65க்கு கொள்முதல்

வேப்பங்கொட்டைக்கு கிராக்கி கிலோ ரூ.65க்கு கொள்முதல்

ஆர்.எஸ்.மங்கலம்,: அதிக அளவிலான எண்ணெய் சத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளதால், வேப்பங்கொட்டைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கமிஷன் கடைகளில் கிலோ ரூ.65க்கு கொள்முதல் செய்கின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விளையும் வேப்பங்கொட்டைகளில், அதிக அளவிலான எண்ணெய் சத்து உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவில் உள்ளதால், இப்பகுதியில் விளையும் வேப்பங்கொட்டைகளுக்கு அதிகமாக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மகசூல் நிலைக்கு வந்த வேப்பங்கொட்டைகளை சேகரிக்கும் விவசாயிகள், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள எண்ணெய் கடைகள், கமிஷன் கடைகளில் வேப்பங்கொட்டைகளை விற்கின்றனர். கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வேப்பங்கொட்டை சேகரிப்பு அன்றாட வருவாய் தரும் தொழிலாக உள்ளதால் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை