கீழமுந்தலில் புதிய கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் பூட்டி வைப்பு
வாலிநோக்கம் : வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தலில் 2024ல் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு வரக்கூடிய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் இயற்கையை உபாதை கழிக்க திறந்தவெளியை நாடுகின்றனர். ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் தண்ணீர் வசதி இன்றி காட்சி பொருளாக உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கிணறும் பயன்பாடின்றி உள்ளது. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க கடலாடி யூனியன் அலுவலர்கள் கழிப்பறை வளாகப் பகுதியை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமுந்தல் ஊராட்சிக்கான தனி அலுவலர்கள் இவ்விஷயத்தில் முனைப்பு காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.