உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிழற்குடை பூமி பூஜை 

நிழற்குடை பூமி பூஜை 

திருவாடானை: திருவாடானை அருகே பாரதிநகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பஸ்சுக்காக வெயில், மழையில் திறந்த வெளியில் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிழற்குடை கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமை வகித்தார். தி.மு.க., காங்., பிரமுகர்கள், பி.டி.ஓ., (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள், கல்லுார் ஊராட்சி செயலர் வள்ளி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை