மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
21-Jul-2025
தொண்டி; தொண்டி அருகே நம்பு தாளை கண்மாய்க்கரை குடியிருப்பு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளைக்கு தலா 15 நிமிடம் நிர்ணயம் செய்யப் பட்டு, குழுவுக்கு 9 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். காளையை அடக்கியவர்களுக்கும், வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
21-Jul-2025