உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை

ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை

ராமநாதபுரம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என ஆட்சிக்கு வருபவர்கள் உறுதி தருகின்றனர். ஆனால் நிறைவேற்றுவது இல்லை. குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது. 70 வயதில் பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் பலர் சிரமப்படுகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எனவே ஏப்.,30 அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தையின் போது நல்ல அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி