அதிகாரிகள் ஆய்வு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர், செல்வநாயகபுரம், கடம்பன்குளம், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்தது. முதுகுளத்துார் பேரூராட்சி தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. அரசு மருத்துவமனை தெரு உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பகுதிகளில் செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளை சுற்றி தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்து வெளியேற்றவும், இனிவரும் நாட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.