உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்மா உணவகம் திறப்பதில் அதிகாரிகள் .. அலட்சியம்: வீணாகி வரும் கிரைண்டர், பாத்திரங்கள்

அம்மா உணவகம் திறப்பதில் அதிகாரிகள் .. அலட்சியம்: வீணாகி வரும் கிரைண்டர், பாத்திரங்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் 9 மாதங்களாக செயல்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்குள்ள கிரைண்டர், பாத்திரங்கள் வீணாகியுள்ளன. ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலும் அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இங்கு மிகக்குறைந்த விலையில் இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என உணவு விற்பனை செய்வதால் மாவட்டம் முழுவதும் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் அம்மா உணவகம் மூலம் பயனடைந்தனர். இந்நிலையில் ஜன., மாதம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டட கூரை பெயர்ந்து விழுந்தது. அன்று முதல் அம்மா உணவகம் செயல்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்., மாதம் மலேரியா வார்டு அருகே உள்ள கட்டடத்தை புதுப்பித்து அங்கு அம்மா உணவகம் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஓரிரு வாரங்களில் சீரமைப்பு பணிகள் முடிந்து அம்மா உணவகம் செயல்பாட்டுக்கு வந்து விடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது வரை அம்மா உணவகம் திறக்கப்படாமல் உள்ளது. கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அம்மா உணவகத்தில் உள்ள கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி வருகிறது. அம்மா உணவகத்தை விரைவில் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை