உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு 

திருவாடானையில் 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு 

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் ஏழு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இயந்திரம் மூலம் இப்பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை விவசாயிகள் தமிழக அரசு சார்பில் துவக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவார்கள்.இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு இத்தாலுகாவில் ஏழு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை தாலுகாவில் சிறுகம்பையூர், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, அஞ்சுகோட்டை, திருவாடானை, என்.எம்.மங்கலம் ஆகிய ஏழு இடங்களில் இன்று முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.சன்ன ரகம் கிலோ ரூ.23.10க்கும், பொது ரகம் ரூ.22.65க்கும் அரசால் விலை வழங்கப்படும். விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல் விற்பனை செய்து பயன்பெறலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ