மேலும் செய்திகள்
டூவீலர் மோதி முதியவர் பலி
07-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலி, கொட்டகுடி, சேத்திடல், அ.மணக்குடி, கடலுார் ஊராட்சிகளில் தலா ரூ.28.35 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.கடலூர் ஊராட்சி மோப்பண்ணையில் நடைபெற்ற விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். யூனியன் தலைவர் ராதிகா, தாசில்தார் வரதராஜன், பி.டி.ஓ., மலைராஜ், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழரசி, தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் மோகன், கண்ணன், கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி, முன்னாள் கிராம தலைவர் பாலன், ஊராட்சி தலைவர்கள் ஜெயபாரதி, செந்தில்குமார், ராமநாதன், யூனியன் அலுவலர்கள் முடியப்பதாஸ், சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Dec-2024