உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மலட்டாற்று சந்திப்பில் புறக்காவல் நிலையம் போலீசாரின் ரோந்து அவசியம்

மலட்டாற்று சந்திப்பில் புறக்காவல் நிலையம் போலீசாரின் ரோந்து அவசியம்

சாயல்குடி : ராமநாதபுரம் செல்லும் ரோடு, கடலாடி - முதுகுளத்துார் ரோடு, துாத்துக்குடி ரோட்டை உள்ளடக்கிய மும்முனை சந்திப்பில் மலட்டாறு பகுதி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அவசியத் தேவையாக உள்ளது.சாயல்குடியில் இருந்து 5 கி.மீ., லும், கடலாடியில் இருந்து 5 கி.மீ.,லும் மலட்டாறு மும்முனை சந்திப்பு உள்ளது. பயணிகள் கூறியதாவது: அதிகாலை முதல் இரவு வரை ஏராளமானோர் இங்கு பல பகுதிகளுக்கு செல்வதற்காக பஸ்சில் வந்து செல்கின்றனர்.எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமாக மணற்பாங்கான இடத்தில் மலட்டாறு பகுதிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் மது போதைக்கு ஆளாகும் இளைஞர்களின் தொல்லை அதிகம் உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தால் ஓரளவு பிரச்னை இன்றி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார கழிப்பறை வளாகங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ