மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, பகவதிமங்கலம் பகுதியில், விளைந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.பகவதிமங்கலம், கொன்னக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், நெல் பயிர்கள் மகசூல் அடைந்துள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால், விளைந்த நெல் வயல்களை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தன. இந்த நிலையில், வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளதால், கடந்த சில நாட்களாக நெல் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி விளைந்த நெல் கதிர்கள் பாதிப்படைந்துள்ளன. ஏக்கருக்கு பல ஆயிரங்கள் வரை செலவு செய்து மகசூல் அடைந்து, அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் நெல் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
01-Dec-2024