மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
6 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
6 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
6 hour(s) ago
ரெகுநாதபுரம், ; ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் 800க்கும் அதிகமான ஏக்கரில் விளைந்துள்ள நெற்பயிர்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். 110 முதல் 120 நாட்களில் விளைந்த நெற்கதிர்களை நன்கு முற்றிய நிலையில் அறுவடை செய்ய தயாரான நிலையில் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.வண்ணாங்குண்டு விவசாயி பிரவீன் கூறியதாவது:தண்ணீர் நிறைந்த நெல் வயல்களில் அறுவடை இயந்திரம் செல்ல முடியாததால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மூலம் அறுவடை செய்யும் பணி நடக்கிறது. பெண்களுக்கு ரூ.500, ஆண்களுக்கு ரூ.800 கூலி தருகிறோம். அறுவடை செய்த நெற்கதிர்களை களத்தில் கொண்டு வந்து கதிர் அடிக்கும் பணி நடக்கிறது.நனைந்த நெற்கதிர்களை பெரிய தார்ப்பாயில் விரித்து காய வைத்து முறையாக பக்குவப்படுத்த வேண்டி உள்ளது. நெல் மணிகள் அறுவடை செய்யும் நிலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மீண்டும் முளைக்கும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago