மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி கொள்முதல் நிலையம் திறப்பு
12-Jan-2025
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய 4 இடங்களில் இன்று முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது. இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக இந்த நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது. சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2450க்கும், பொது ரகம் ரூ. 2405க்கும் கொள்முதல் செய்யபடும். ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து நெல் வரத்து அதிகமாகும் பட்சத்தில் கூடுதலான இடங்களில் திறக்கப்படும் என்றனர்.
12-Jan-2025