உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்

முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்றுவட்டார கிராமங்களில் செங்கல் சூளைக்காகவும், தீயிட்டு எரிப்பதாலும் பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன.முதுகுளத்துார் வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான கிராமங்களில் பனை மரங்கள் அதிகளவில் இருந்தன. காலப்போக்கில் பனை மரங்கள் முறிந்து விழுந்தும் சிலர் வெட்டியும் அழித்துள்ளனர்.தற்போது முதுகுளத்துார்-ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே ரோட்டோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தும், சிலர் தீயிட்டு எரித்தும் வருகின்றனர். மேலும் செங்கல் சூளையில் எரிப்பதற்காக பனை மரங்களை அழித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.இதனால் ஒரு காலத்தில் ஏராளமான பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது குறைந்து கொண்டே வருகின்றன. பல ஆண்டு பயன் தந்த பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் முதுகுளத்துார்வட்டாரத்தில் பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி