உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்

கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்

பரமக்குடி : பரமக்குடி அருகே கே.வலசை கிராமத்தில் கரும்பு தோட்டத்திற்கு வைக்கப்பட்ட தீ பனை மரங்களில் பற்றி எரிந்தது.பரமக்குடி அருகே கே.வலசை கிராமத்தில் கரும்பு பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் தோட்டத்திற்கு தீ வைத்தனர். அப்போது மள மளவென எரிந்த தீ அருகில் இருந்த பனைமரக் கூட்டத்தில் பற்றியது. இதனால் கிராமம் முழுவதும் புகைமூட்டம் பரவியதால் கிராம மக்கள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி பனை மரத்திற்கு பற்றிய தீயை அணைத்தனர். அப்போது விவசாயிகள் பொதுவாக தோட்டத்திற்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து காற்றின் வேகம் மற்றும் கோடை காலத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால் வீடுகளுக்கும் சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது, என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ