உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிப்.15ல் பனைமர தொழிலாளர் மாநாடு

பிப்.15ல் பனைமர தொழிலாளர் மாநாடு

பரமக்குடி: -பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பனைமரத் தொழிலாளர்கள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு பிப்.15ல் நடக்கிறது.பனை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் முத்துராமசாமி தலைமையில் 5 லோக்சபா தொகுதி விவசாயிகள்கலந்துகொள்ள உள்ளனர். அப்போது தென்னை மரத்திலிருந்து நீரா பானம் இறக்க அரசாணை வெளியிட்டது போல் பனை மரத்திலிருந்து கள் இறக்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும் 'உங்களுக்கு தேவை ஓட்டு என்றால், எங்களுக்கு தேவை கள் இறக்க அரசு ஆணை,' என்ற வாசகங்கள்அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பனைமரத் தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டமைப்பு ஒன்று திரண்டு மாநாடு நடத்துவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட செயலாளர் மலைச்சாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ