உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பள்ளி மாணவி பலாத்கார வழக்கு: 5 மாதத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாருக்கு மாற்றம்

பரமக்குடி பள்ளி மாணவி பலாத்கார வழக்கு: 5 மாதத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாருக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை 5 மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும், வழக்கை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கும் மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நகராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க., முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்தவழக்கு சி.பி.சி.ஐ. டி.,க்கு மாற்றப்பட்டது. சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் ஜாமினை ரத்து செய்தார்.இதை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் அன்னலட்சுமி உமா, கயல்விழி, ராஜா முகமது, புதுமலர் பிரபாகருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தில் சிகாமணி மேல்முறையீட்டு வழக்கு செப்.,26 ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் ரவிக்குமார், சஞ்சய்கரோல் அமர்வு விசாரித்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமினை ரத்து செய்தது சரிதான். 3 வாரங்களுக்குள் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். ஐந்து மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது சிகாமணி உட்பட 5 பேரும் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகோபிநாத் வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.இரு வாரங்களில் ஆவணங்கள் அனைத்தும் அங்கு மாற்றப்படும். அனைவரும் அக்.,25 ல் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை