உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர்களை முறைப்படுத்துங்கள் பரமக்குடி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வாக்காளர்களை முறைப்படுத்துங்கள் பரமக்குடி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி கூட்டத்தில், அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்கள் ஒரே எண்ணிக்கையில் உள்ளவாறு முறைப்படுத்த வேண்டும், என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். கமிஷனர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஐந்து முனை அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைக்கு தன் சொந்த இடம், வீட்டையும் அரசுக்கு தானமாக வழங்கிய நடிகை சிவபாக்கியம் நினைவாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.தெரு நாய்களுக்கு ஏ.ஆர்.வி., தடுப்பு ஊசி செலுத்த 20 லட்சம் ரூபாய் செலவினத்தொகை அனுமதி உட்பட 124 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர்கள் பலரும் வார்டுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியும், 36 வார்டுகளிலும் வாக்காளர்கள் ஒரே எண்ணிக்கையில் உள்ளவாறு முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ