உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி சவுராஷ்டிரா பள்ளி மாநில முதலிடம் 

 பரமக்குடி சவுராஷ்டிரா பள்ளி மாநில முதலிடம் 

ராமநாதபுரம்: -தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் இணைந்து நடத்திய பள்ளி புத்தாக்கம் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்றபரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளிமாநில அளவில் முதலிடம், திருவாடானை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம், திருவாடானை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சென்னையில் வழங்கினார். பரிசு பெற்ற பள்ளி மாணவர்களை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் குமார், முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை, மாவட்டக்கல்வி அலுவலர் சங்கர், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் உதவி திட்ட அலுவலர் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !