உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதம்சேரியில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

ஆதம்சேரியில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

சிக்கல் : ஏர்வாடி அருகே ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தனியாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிக் கட்டடம் சேதமடைந்த சிமென்ட் கூரை கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டடம் 1965ல் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் இல்லை.முழுவதும் சிமென்ட் சீட் கூரையாக இருந்ததால் மழை, வெயில் காலங்களில் மாணவர்கள் சிரமப்பட்டு படிக்கின்றனர். பள்ளி வராண்டா மற்றும் மரத்தின் நிழலில் வகுப்புகள் நடக்கிறது.1 முதல் 5 வகுப்புகளில் கட்டடத்தின் பக்கவாட்டு சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டக்கோரி மாணவர்களின் பெற்றோர் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அனுப்பி வந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால் அதிருப்தி அடைந்த ஆதம்சேரி கிராம மக்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று காலை 10:00 மணிக்கு கடலாடி வட்டாரக் கல்வி அலுவலர் விஜயகுமாரி, கடலாடி துணை பி.டி.ஓ., உலகநாதன், வி.ஏ.ஓ., ஏர்வாடி போலீசார் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் மதியம் பள்ளிக்கு சென்றனர். பிப்., மாதத்தில் கட்டடம் கட்டப்படும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ