உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் கிடப்பில் பூங்கா திட்டம்

தொண்டியில் கிடப்பில் பூங்கா திட்டம்

தொண்டி: தொண்டியில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தொண்டி பேரூராட்சி தொழில் ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதால் மக்கள் பொழுது போக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஐந்து ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.உடற்பயிற்சி கூடம், யோகா மையம், நடைபயிற்சி தளம், விளையாட்டு திடல் மற்றும் கழிப்பறை வசதியுடன் பசுமையான பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓராண்டிற்கு முன்பு இடத்தை ஆர்.டி.ஓ., வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.அதன் பின் ரூ.1.45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இத்திட்டம் செயல்படுத்துவற்கான முயற்சி எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், இத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பிறகும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. பூங்கா அமைக்கும் பணியை உடனடியாக துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை